பதஞ்சலி அறிமுகம் செய்த கொரோனா மருந்து – இந்திய மருத்துவக்குழு எதிர்ப்பு!!

0

கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தாக, உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற விளம்பரத்துடன் உள்ள மருந்து ஒன்றை பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்திற்கு இந்திய மருத்துவ கழகம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பதஞ்சலியின் கொரோனா மருந்து

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் கொரோனா அவசரகால பயன்பாட்டில் உள்ளது. மற்ற நாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பு வேகமெடுத்து வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழ்களுடன் பதஞ்சலி நிறுவனம் ஒரு கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ளும் வல்லமை கொண்டது என்ற விளம்பரத்துடன் கரோனில் என்ற மாத்திரையை பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் மற்றும் மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

விஷ்ணு வரதனின் இயக்கத்தில் அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி – இணையத்தில் கசிந்த தகவல்!!

மேலும் அந்த மருந்து சுகாதாரத்துறையின் சான்றிதழ் பெற்றது என அறிவித்துள்ள படியால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் அவர்களிடம் இந்திய மருத்துவக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர், அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்படாத, போலியான விளம்பரங்கள் கூடிய மருந்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் எப்படி கலந்துகொள்ள முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here