‘கிரிக்கெட் புகழ்’ பாண்ட்யா சகோதரர்களின் தந்தை மரணம் – சோகத்தில் குடும்பத்தார்!!

0

இந்திய அணியின் ஆல் ரவுண்டராக திகழ்பவர் ஹர்டிக் பாண்ட்யா. இவரது சகோதரன் க்ருனால் பாண்ட்யா இவரும் ஓர் கிரிக்கெட் வீரர். இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வருபவர்கள். இவர்களது தந்தை தற்போது திடீரென்று காலமாகியுள்ளார். இதனால் பாண்டியா குடும்பத்தார் சோகத்தில் உள்ளனர்.

பாண்ட்யா சகோதரர்கள்:

தற்போது உள்ள இந்திய அணியின் முக்கியமான ஆல் ரவுண்டராக திகழ்பவர் ஹர்டிக் பாண்ட்யா. சமீபத்தில் காயத்தினால் அவதிப்பட்ட இவரது உடல் நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளது. இவரை போலவே இவரின் சகோதரர் க்ருனால் பாண்ட்யா இவரும் ஓர் கிரிக்கெட் வீரர். சகோதரர்கள் இருவரும் கிரிக்கெட்டில் மிக அருமையாக விளையாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் பல வருடங்களாக விளையாடி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தந்தை திடீர் மரணம்:

இவர்கள் இருவரின் தந்தை தான் ஹிமான்ஷு பாண்ட்யா. பாண்ட்யா சகோதரர்களின் கிரிக்கெட் பயணம் வெற்றியடைவதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இவரே. இவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, “எனது மகன்களின் கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார். இவர் முந்தைய காலங்களில் வாகன பைனான்ஸ் கம்பெனி நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது திடீரென்று மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இந்த செய்தி அனைவரையும் உலுக்கியுள்ளது.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!!

ஹர்டிக் பாண்ட்யா தற்போது போட்டிகளில் பங்கேற்காத நிலையில், க்ருனால் சையது முஸ்தாக் அலி கோப்பை போட்டியில் பரோடா அணியின் கேப்டனாக உள்ளார். மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவத்தால் க்ருனால் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here