இயக்குனர் சுசீந்திரனின் தயார் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகினர்!!

0

சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் இயக்குநர் சுசீந்திரனின் தாயார் இன்று திடீரென காலமானார். மாரடைப்பு காரணமாக காலமான அவரது மறைவுக்கு திரையுலகினை சேர்ந்த பலரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் சுசீந்திரன்:

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கடந்த 2009ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் தான் சுசீந்திரன். அவரது படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக இருக்கும். எனவே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனராக இருந்து வருகிறார். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, கென்னடி கிளப், பாண்டியநாடு, ஜீவா ஆகிய நல்ல ஹிட் படங்களை தந்துள்ளார். அவர் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

‘கிரிக்கெட் புகழ்’ பாண்ட்யா சகோதரர்களின் தந்தை மரணம் – சோகத்தில் குடும்பத்தார்!!

இந்நிலையில் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலை சுமார் 11 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணாமாக உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் இன்று நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுசீந்திரனுக்கு உறவினர்களும், நண்பர்களும், திரையுலகினை சேர்ந்தவர்களும் தமது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here