முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!!

0

இந்தியாவில் இன்று முதல் கொரோனாவிற்கான தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. தற்போது தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்காக மத்திய அரசு ஓர் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த செயலி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை வழங்கும் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது முதற்கட்டமாக இந்தியாவில் மருத்துவர்கள், முன் கள பணியாளர்கள் போன்ற 30 கோடி பேருக்கு தடுப்பூசியை செலுத்த உள்ளனர். தற்போது இந்த திட்டத்தை இந்தியா நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வதற்கு ஓர் செயலியை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த செயலியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கோவின்:

தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்கு கோவின் எனும் செயலியை அனைத்து மக்களும் பயன்படுத்தலாம். மேலும் இந்த செயலியை அரசால் அங்கீகரிக்கப்பட்ட Google Play Store மற்றும் App Storeல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கொரோனா தொற்று, தடுப்பூசி அறிமுகம் மற்றும் கோ-வின் மென்பொருள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க 24 மணிநேர உதவி மையம் – 1075 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமே தடுப்பூசி பெற விரும்புவோர் தங்களின் விவரத்தை பதிவு செய்து கொண்டு முன்பதிவு செய்ய முடியும்.

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – 2 விக்கெட்களை இழந்து தவிக்கும் இந்திய அணி!!

இந்தியாவில் உள்ளவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த செயலி மூலம் தடுப்பூசியை பயன்படுத்துபவர்களை நேரடியாக கண்காணிக்க முடியும், மேலும் தடுப்பூசி போடுவதற்கான நேரத்தையும் குறிக்க முடியும். முன்பதிவு செய்வதற்காக பயனாளிகள் தங்களது விவரங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வழங்கப்படும். மேலும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து மக்களுக்கு கியூஆர் கோடு மூலம் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here