#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – 2 விக்கெட்களை இழந்து தவிக்கும் இந்திய அணி!!

0

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணி தங்களது 4வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியுள்ளது. தொடக்கத்திலையே தனது 2 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்பேன் மைதானத்தில் வைத்து துவங்கியது. இந்திய அணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயத்தினால் அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அனைவரின் எதிர்பார்ப்பு படி நடராஜன் இந்த போட்டியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் வார்னர் இந்த முறையும் ஏமாற்றினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய அணி தரப்பில் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசி வந்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 369 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதிகபட்சமாக லபூசான் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மேலும் ஆஸ்திரேலியா கேப்டன் பெயின் அரைசதம் பதிவு செய்துள்ளார். இந்திய அணி தரப்பில் அறிமுக போட்டியாளர் நடராஜன், தாகூர், சுந்தர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளனர். சிராஜ் 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் கலக்கி வரும் நடராஜன் – கால் பதித்த முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகள்!!

தொடக்கத்தில் தடுமாறும் இந்தியா அணி:

அதன்பிறகு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. இந்திய அணி சார்பில் ரோஹித் மற்றும் கில் துவக்கம் தந்தனர். கடந்த போட்டியில் அசத்திய கில் இந்த போட்டியில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு புஜாரா மற்றும் ரோஹித் ஜோடி சேர்ந்து அணிக்கு ரன்களை சேர்த்து வந்தனர். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரோஹித் 44 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்துள்ளார். தற்போது களத்தில் புஜாரா மற்றும் ரஹானே விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 62\2
புஜாரா – 8*
ரஹானே – 2*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here