டெஸ்ட் போட்டியில் கலக்கி வரும் நடராஜன் – கால் பதித்த முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகள்!!

0

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் சர்வதேச பயிற்சி கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே தமிழகத்தை சேர்ந்த நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் முதல் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய நெட் பவுலர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.

முதல் விக்கெட்டை கைப்பற்றினார்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது போட்டி தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கியிருக்கும் நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிஇருக்கிறார். இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வந்து டெஸ்ட் உட்பட அனைத்து தர போட்டிகளிலும் பங்குபெற்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் நடராஜன். தற்போது நடந்து வரும் போட்டியில் சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே மற்றும் மாத்யூ வேட் கூட்டணியில் முதல் விக்கெட்டாக மாத்யூ வேட் விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார் நடராஜன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டி.என்.பி.எல் லீக்கில் அறிமுகவீரராக களமிறங்கிய நடராஜனின் திறமையை பார்த்து ஐபில் போட்டியில் கடந்த 2017 ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த ஆண்டு 2020 ல் நடந்த ஐபில் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாடிய நடராஜன் தனது யார்க்கர் பந்து வீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தற்போது இந்திய அணியில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் அனைத்து தர கிரிக்கெட் போட்டியிலும் வலைதள பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்றார். மேலும் அங்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக கையாண்டார். நடராஜனுக்கு போதிய அனுபவம் இல்லை, அவரால் சாதிக்க முடியுமா, சிவப்புப்பந்து வீச்சில் அவருக்கு பக்குவம் இல்லை, உள்நாட்டு விளையாட்டு போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை என அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் தனது அசாத்திய திறமையால் அனைத்து போட்டிகளிலும் வெற்றி களம் கண்டு வருகிறார்.

கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடவிருந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயத்தால் அந்த போட்டியில் இருந்து விலகவே நடராஜனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here