டீ டைம் ஸ்பெஷல் “உருளைக்கிழங்கு ரிங்ஸ்” – செஞ்சு அசத்துங்க!!

0

குழந்தைகளுக்கான ஸ்பெஷல் உணவாக இன்று “உருளைக்கிழங்கு ரிங்ஸ்” எப்படி செய்வது என்று பார்க்கலாம். இன்று குழந்தைகள் அதிகமாக கடைகளில் கிடைக்கும் உணவுகளை தான் விரும்பி உண்கின்றனர். ஆனால், அதில் அளவுக்கு அதிகமாக ரசாயனங்கள் கலந்து இருப்பதால் அவர்களின் உடலிற்கு மிகவும் கேடு விளைவிப்பதாக இருக்கும். இதற்கு மாற்று ஏற்பாடு தான் இந்த டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி.

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு – 3
  • சோள மாவு – 2 மேஜைக்கரண்டி
  • பிரட் – 2
  • மிளகு தூள் – 2 மேஜைக்கரண்டி

Potato garlic rings Recipe by Shikha Vijay - Cookpad

  • சாட் மசாலா – 2 மேஜைக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

  • எடுத்து வைத்துக்கொண்ட உருளைக்கிழங்குகளை வேக வைக்க வேண்டும். 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.
  • இதனுடன் சோள மாவு, மிளகு தூள், சாட் மசாலா, பிரட் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இதனை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • நன்றாக வட்ட வடிவில் தேய்த்து அதனை வட்ட வடிவில் எடுத்து கொள்ளவும்.
  • ஒரு சட்டில் எண்ணெயினை ஊற்றி அதில் இந்த மாவினை போடவும். அது பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும்.

சூடான சுவையான “உருளைக்கிழங்கு ரிங்ஸ்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here