மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை – அமைச்சர் ஆர்பி உதயகுமார்!!

0

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்துள்ள அமைச்சர் ஆர். பி. உதயகுமார், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க அரசிடம் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணி

இன்று மாநிலம் முழுவதும் காளைகளுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைப்பதற்காக அமைச்சர் ஆர்பிஉதயகுமார் வருகை புரிந்தார். ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்த அமைச்சர் உதயகுமார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது அவர் கூறியதாவது, “ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்பட பரிசீலனை செய்து வருகிறோம். இதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வரவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் தான் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தனர்.

பண்டிகை நாளான இன்று தங்க விலை அதிரடியாக குறைந்துள்ளது – சந்தோச களிப்பில் மக்கள்!!

தொடர்ந்துபேசிய அவர், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுக்குட்பட்டு தான் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் திருமங்கலம் அருகேயுள்ள டி. குன்னத்தூர் என்ற ஊரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு கட்டியுள்ள கோவிலை திறந்து வைக்க ஜனவரி 30 ம் தேதி முதல்வர் பழனிச்சாமி வருவார்” என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here