பண்டிகை நாளான இன்று தங்க விலை அதிரடியாக குறைந்துள்ளது – சந்தோச களிப்பில் மக்கள்!!

0

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று தங்க விலை அதிரடியாக குறைந்து வருகின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சந்தோச களிப்பில் உள்ளனர். அதே போல் சுப நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் நகை கடைகளுக்கு படை எடுத்துள்ளனர்.

தங்கம் என்னும் பொக்கிஷம்:

இந்தியாவில் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியினை ஒரு முதலீட்டு பொருளாக என்றுமே கருதுவதில்லை. மக்களை பொறுத்தவரை அது ஒரு மதிப்பான ஒன்றாக கருதப்படுகின்றது. இப்படியான தங்கத்தினை அதிகம் விரும்புவது அனைவரும் என்றாலும், குறிப்பாக பெண்கள் தான் நகை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவர். தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் நாளுக்கு நாள் மக்களின் தேவையை பொறுத்து விலை மாறுபடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Bridal Jewellery - Bridal Wedding Jewellery Sets Online | Malabar Gold &  Diamonds

கடந்த ஆண்டு தங்க விலை மிகவும் அதிகபட்சமாக உயர்ந்து வந்தது. அனைத்து மக்களும் இதனால் கவலை அடைந்தனர். தற்போது சில நாட்களாக தான் தங்க விலை கொஞ்சம் கொஞ்சமாக சரிவினை சந்தித்து வருகின்றது. இதனை அடுத்து பண்டிகை தினமான இன்று தங்க விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் – உற்சாகத்துடன் துவக்கம்!!

Jaas Jewellers

சென்னையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37,216 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் 4,652 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இது ஒரு பக்கம் இருக்க வெள்ளி ஒரு கிராம் 70.60 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ தங்கம் 70, 600 என்று விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை நிலவரத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here