இன்று இந்திய ராணுவ தினம் – ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து!!

0

ஜனவரி 15 ம் தேதியான இன்று இந்திய ராணுவத்தினத்தை ஒட்டி ராணுவ வீரர்களுக்கு இந்தியாவின் ஜனாதியாதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

இந்தியாவின் ராணுவதினம் இன்று ஜனவரி 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜெனரல் கே.எம் கரியப்பா இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற ஜனவரி 15 ம் தேதி ஆண்டு தோறும் இந்திய ராணுவதினமாக அனுசரிக்கப்பட்டது வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

பண்டிகை நாளான இன்று தங்க விலை அதிரடியாக குறைந்துள்ளது – சந்தோச களிப்பில் மக்கள்!!

ராணுவத்தினத்தை ஒட்டி ராணுவ வீரர்களுக்கு இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “இந்திய ராணுவத்தின் வீரம் கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் நாட்டுக்கான சேவையில் உயர்ந்த தியாகத்தை செய்த முன்னாள் வீரர்கள் அனைவரின் தியாகத்தை நாம் நினைவுகூறவேண்டும். தைரியமான உறுதியான மற்றும் முன்னாள் வீரர்களாகிய அனைவரின் குடும்பங்களுக்கு நம் நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “நமது இந்திய ராணுவம் வலிமையானது ,தைரியமானது மற்றும் உறுதியானது. நமது நாட்டை பெருமைப்படுத்துவது நமது இந்திய ராணுவம் தான். நம் நாட்டு மக்கள் அனைவரின் சார்பில் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here