அஞ்சலக கணக்காளர் தேர்வுகள், இனி தமிழிலும் எழுதலாம் – மத்திய அரசு அறிவிப்பு!!

0

அஞ்சலக கணக்காளர் தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த தேர்வுகளை எழுத இருக்கும் தேர்வர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஞ்சலக தேர்வுகள்:

மத்திய அரசின் பல தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தான் நடைபெறும். இதனால் தமிழ் வழியில் படித்தவர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருந்தாலும் மொழி அவர்களுக்கு ஒரு தடையாக இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து பல தரப்பில் இருந்தும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்து வந்தன. தமிழிலும் விடைகள் எழுத கூடிய வசதியினை தேர்வாணையங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அனைவர் சார்பிலும் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

இன்று இந்திய ராணுவ தினம் – ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து!!

இதனை அடுத்து சென்னையில் வட்டத்தில் நடைபெற இருக்கும் அஞ்சலக கணக்காளர் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு தேர்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசிற்கு ஒரு கடிதனை எழுதினார். அதில் இந்த அஞ்சலக தேர்வுகள் தமிழ் மொழியில் தேர்வர்கள் எழுத வழிவகை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தார். இவரது கோரிக்கையினை பரிசலித்த மத்திய அரசு இனி அஞ்சலக தேர்வுகளை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து சு.வெங்கடேசன் கூறுகையில், “மத்திய அரசு பணிகளில் தமிழ் மொழிக்கான இடத்தினை வழங்க தொடர்ச்சியாக போராடுவேன். இதற்கான எனது முயற்சிகள் தொடரும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here