புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் – உற்சாகத்துடன் துவக்கம்!!

0

தமிழர்களின் உற்சாக பெருநாளான பொங்கல் விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் மழையினையும் பொருட்படுத்தாமல் பொங்கல் வைத்து கொண்டாடினர். இன்று உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் பாலமேட்டில் உற்சாகமாக துவங்கியது.

தமிழர் திருநாள்:

தமிழர்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம் பேதமின்றி கொண்டாடும் ஒரு பெரு நாள் என்றால் அது, பொங்கல் பண்டிகையை தான். தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக பொங்கல் பண்டிகையின் போது கனமழை வெளுத்து வாங்குகிறது. ஆனாலும், மக்கள் எப்போதும் போல் உற்சாகத்துடன் கொண்டாடினர். இதனை அடுத்து இன்று உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் பாலமேட்டில் உற்சாகமாக துவங்கியுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு விதித்திருந்த அனைத்து விதமான நெறிமுறைகளுடன் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். மஞ்சமலை ஆற்று திடலில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நயன்தாராவாகவே மாறி போன அனிகா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்று போட்டியில் பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டிகள் இன்று மாலை 4 மணி அளவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் போட்டிகளை கண்டுகளித்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையில் வைக்கோல் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here