நயன்தாராவாகவே மாறி போன அனிகா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

தற்போது “குட்டி நயன்தாரா” என்று அனைவராலும் அழைக்கப்படும் அனிகா சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் வந்த சுட்டி குழந்தையா இது என்று அனைவருக்கும் கேள்வி எழும். அந்த அளவிற்கு அவரது புகைப்படங்கள் உள்ளன.

குட்டி நயன்தாரா:

சிறு வயதில் திரைத்துறையில் அறிமுகமாகி வெற்றி அடைந்து விட்டு பின் சில காலங்களுக்கு பின் திரைத்துறை நுழைந்து சாதித்தவர்கள் பலர் உண்டு. ஆனால் இதற்கு நேர்மாறாக சிறு வயதில் அறிமுகமாகி தற்போது அனைத்து தரப்பு நடிகைகளுக்கும் பெரும் பீதியை கிளப்பி வருபவர், அனிகா சுரேந்தர். முதன் முதலாக “தல” அஜித்தின் “என்னை அறிந்தால்” படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். அதன் பின் சில படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடைசியாக, அஜித் மற்றும் நயன்தாரா நடித்த “விஸ்வாசம்” திரைப்படத்தில் நடித்தார். இதனால் அனைவரும் அவரை தல மகள் என்றே செல்லமாக அழைத்து வந்தனர். இப்படியான நிலையில் இந்த பொது முடக்கத்தின் போது ஒட்டு மொத்தமாக முழு நேர நடிகையாக மாறி விட்டார்.

இதனால் அனைவரும் அசந்து போய் உள்ளனர். அது மட்டும் அல்லாமல் பெரிய பெண் போல சேலை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டார். இதனால் அவர் பார்ப்பதற்கு நயன்தாரா போல் இருந்ததால் அனைவரும் அவரை “குட்டி நயன்தாரா” கிண்டல் அடித்து வந்தனர்.

“மாஸ்” ஆக இருக்கும் “மாஸ்டர் – திரை விமர்சனம்!!

இப்படியான நிலையில், அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அவர்களில் சிலர் அவருக்கு பரிசுகளை வழங்கி மகிழ்வித்துள்ளனர். இதனை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிகா.

அதே போல் சைடு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறு நட்சத்திரமாக அறிமுகமான அனிகாவா இது என்று கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்து பலரும் கிறக்கத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here