அதிரடியாக குறையும் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!!

0

தொடர்ந்து ஒரு வாரமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை, இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.116 குறைந்து ஒரு சவரன் ரூ.37,296 ரூபாய்க்கு சென்னையில் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்து வரும் தங்கத்தின் விலை:

கடந்த 7 நாளாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருக்கிறது. இதனால் நகைப்பிரியர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த 7ம் தேதி முதல் சரிந்து வரும் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.116 குறைந்து 37,296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,662 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் ஓர் கிராம் வெள்ளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிக்கன் ரைஸுக்காக கொலை மிரட்டல் – பாஜக வை சேர்ந்த இருவர் கைது!!

இதுவரை கடந்த 6 நாட்களாக தங்கத்தின் விலை 1,548 ரூபாய் வரை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 69.80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி தற்போது ஒரு ரூபாய் அதிகரித்து 70.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே தங்கம் வாங்க சரியான நேரமாகையால் மக்கள் உற்சாகமுடன் தங்க நகைகளை வாங்கி செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here