வாட்ஸ்ஆப் செயலி டெலிட் ஆகாது – இறங்கி வந்த மார்க்

0

வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவதில் பயனாளர்களுக்கு எந்த சிக்கல்களும் இருக்காது எனவும் அவர்களின் தனியுரிமை கொள்கைகள் பாதிக்கப்படாது மற்றும் அவர்களது செய்தி பரிமாற்றங்களின் Privacy பாதுகாக்கப்படும் எனவும் Facebook உரிமையாளர் மார்க் ஸூக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்ஆப் செயலி சிக்கல்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியை Facebook நிறுவனம் வாங்கியது நமக்கு தெரியும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு Facebook நிறுவனம் சில அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைத்தையும் Facebook இல் பகிர்ந்து கொள்ள வலியுறுத்துவது போல அந்த அறிக்கை அமைந்திருந்தது. அந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாதோரின் வாட்ஸ்ஆப் கணக்கு பிப்ரவரி 8ம் தேதியோடு முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே பயனாளர்கள் பலரும் வாட்ஸ்ஆப்பிற்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு சில செயலிகளுக்கு மாறத்துவங்கினர்.

இதனால் வாட்ஸ்ஆப் செயலிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு தற்போது Facebook நிறுவனர் மார்க்ஸூகார்பெர்க் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் “பயனாளர்களின் அழைப்பு விவரங்கள், இருப்பிட முகவரி போன்ற விவரங்கள் Facebookல் பகிரப்படாது எனவும், வாட்ஸ்ஆப் குழுக்கள் அதன் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்” எனவும் தெரிவித்திருந்தார்.

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – 2 விக்கெட்களை இழந்து தவிக்கும் இந்திய அணி!!

இந்நிலையில் தற்போது மீண்டும் விளக்கமளித்துள்ள facebook நிறுவனம்,தங்களது புதிய நிபந்தனைகளை நிறுத்திவைப்பதாகவும், பிப்ரவரி 8ம் தேதி யாருடைய கணக்கும் முடக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் வியாபார சம்பந்தமான நிபந்தனைகளை மே 15ம் தேதி வரை ஒத்திவைப்பதாகவும் கூறியுள்ளது. இதன்மூலம் facebook நிறுவனம் தனது வாட்சாப் செயலியை பாதுகாக்க தற்போது இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here