பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ஷூட்டிங்கில் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்

மக்கள் மத்தியில் தற்போது சீரியல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவியில் சீரியலுக்கு தனி மவுசு தான். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டு குடும்பத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட கதை என்பதால் பலரும் இந்த சீரியலை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமே முல்லை, கதிர் தான். முல்லையாக நடித்த சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த காவியா முல்லையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சித்ரா ரசிகர்கள் பலரும் இதனை எதிர்த்தாலும் நாளடைவில் ஏற்றுக்கொண்டனர். தற்போது முல்லையாகவே நமது நெஞ்சத்தில் பதிந்து விட்டார் காவியா.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் ட்விட்டர் வீடியோ!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்கள் இருவருக்கும் எப்பொழுது ரொமான்ஸ் சீன் வரும் என பலரும் கேட்டு வருகின்றனர். அதற்கு காவியவும் கூடிய விரைவில் என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் செய்யும் லூட்டியை காவியா வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வியூஸ் அள்ளியுள்ளது என்றே சொல்லலாம். அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here