மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் ட்விட்டர் வீடியோ!!

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படம் வெளியாகி 50 நாளை வெற்றிகரமாக கடந்துள்ளது. அதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ்.

மாஸ்டர் 50வது நாள்

‘கைதி’ என்ற வெற்றி படத்தை இயக்கியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரின் அடுத்த படைப்பாக வெளியானது ‘மாஸ்டர்’ திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் நடிகை மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகியோருடன் இன்னும் பல்வேறு திரைப்பட்டாளங்கள் நடித்துள்ளனர். கொரோனா சூழலில் கடந்த பொங்கல் தினத்தன்று இந்த திரைப்படம் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் இசை இணையத்தில் வெளியாகி அதிகபட்ச பார்வையாளர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாஸ்டர் படத்துக்கு, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதித்திருந்த நிலையில், படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் கூட்டம் அலை மோதியது. எக்கச்சக்க வசூல் சாதனையும் நிகழ்த்தியுள்ளது மாஸ்டர். இத்திரைப்படம் வெளியான குறுகிய காலத்திலேயே ஓடிடியில் ரிலீசானது.

தமிழில் தயாராகும் ‘அய்யப்பனும் கோஷியும்’ – படத்தில் கமிட்டான முன்னணி நடிகர்கள்!!

இருந்தாலும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி தற்போது 50வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்தின் 50ஆவது நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் 50ஆவது நாளை ஒட்டி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். லோகேஷ் கனகராஜின் இந்த பதிவால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் எக்கச்சக்க சந்தோஷத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here