தமிழக சட்டமன்ற தேர்தல் – அறிக்கையை வெளியிட்ட கமல்ஹாசன்!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் கூட்டணி கட்சிகள் குறித்த முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒரே கட்டமாக தான் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர்கள் தெரிவித்தனர். தற்போது தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் இருக்கிறது. குறிப்பாக அதில் பெண்கள் பயன்பெறும் அதிக திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அவர் கூறியதாவது, இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றது தெரிவித்தார். மேலும் சீருடை துறையில் 50% வேலை பெண்களுக்கு அளிக்கப்படும் என்றும், ஒரு இளைஞர் 5கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கினால் அவருக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – ம.நீ.ம, சமக, ஐ.ஜெ.கே கூட்டணி உறுதி செய்த சரத்குமார்!!

ஆரோக்கியமான தமிழகம் என்ற இயக்கத்தை பள்ளி மற்றும் கல்லூரிகள் தோற்றுவிக்கும் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் அனைத்து பஞ்சாயத்திலும் விளையாட்டு மையங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும், விளையாட்டு மேம்பாட்டுக்காக 7 செயல் திட்டங்களையும் தெரிவித்தார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து சில நாட்களில் பேசப்படும் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் அரசியல் மாற்றத்திற்கு உதவுபவர்களுடன் தயார் என்றும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here