தமிழில் தயாராகும் ‘அய்யப்பனும் கோஷியும்’ – படத்தில் கமிட்டான முன்னணி நடிகர்கள்!!

0

மலையாளத்தில் உருவான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதிக பார்வையாளர்களின் கவனம் ஈர்த்த இந்த திரைப்படம் தமிழில் மறுதயாரிப்பு செய்யப்படவுள்ளது.

தமிழில் உருவாகும் ‘அய்யப்பனும் கோஷியும்’

பிரபல மலையாள நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. கடந்த 2020ம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களில் ஒன்று ‘அய்யப்பனும் கோஷியும்’. ஆக்சன் த்ரில்லர் வகையை சேர்ந்த இப்படம் மக்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொதுவாக மலையாள திரைப்படங்களில் எப்போதும் ஒரு நேச்சுரல் டச் இருக்கும். கமர்சியல் படங்களை விட ரியாலிட்டி சார்ந்த கதைகள் தான் மலையாள மக்களின் விருப்பமாக இருக்கும். அந்த வகையில் வெளியான சில மலையாள படங்கள் பிற மொழி ரசிகர்களையும் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு அதிகாரிகளின் ஈகோ பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம்.

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது அஜித் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

இதில் அய்யப்பனாக பிஜுமேனனும், கோஷியாக பிரித்விராஜும் நடித்துள்ளனர். உலக மக்கள் கவனம் ஈர்த்த இந்த திரைப்படம் தமிழில் மறுதயாரிப்பு செய்யப்படவுள்ளது. இப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார். தொடர்ந்து தமிழில் தயாராகும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here