இல்லத்தரசிகளே மனசை தேத்துங்க.., பாண்டியன் ஸ்டோர்ஸில் கிளைமாக்ஸ்.., கடைசி சீன் இதுதான்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்.., அவருக்கு பதில் இனி இவர் தான்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்.., அவருக்கு பதில் இனி இவர் தான்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது யாருமே எதிர்பார்க்காத விதமாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே பிரிந்து விட்டது. மேலும் கண்ணன் ஐஸ்வர்யாவின் பித்தலாட்டமும் வெளிவந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் மூர்த்தி கஷ்டப்பட்டு யாரும் இந்த வீட்டுல இருக்க வேண்டாம் என்ற வார்த்தையை விட இதனால் ஐஸ்வர்யா கோபமடைந்து வெளியே போகும் அளவிற்கு சென்று விட்டார்.

pandian stores

மேலும் ஐஸ்வர்யா பேசுவதற்கு கண்ணன் பார்த்துக்கொண்டு சும்மாவே தான் இருந்து கொண்டுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது அடுத்ததாக என்ன நடக்க போகிறது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஏற்பட்ட முதல் பிளவு கண்ணன் காதலித்து ஓடி போனது தான். அதன் பிறகு அவர்களை குடும்பம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து இப்பொழுது தான் சேர்த்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பிறகு சில பிரச்சனைகளால் கதிர் முல்லை வீட்டை விட்டு வெளியேறினர். இப்பொழுது தனியாக ஹோட்டல் வைத்து அது பிக்கப் ஆகி லாபம் பார்த்து வருகிறது. இந்நிலையில் கடைசியாக மிச்சம் இருப்பது ஜீவா-மீனா தான். இப்பொழுது அவர்களும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஜனார்த்தனன் சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் சூப்பர் மார்க்கெட் பொறுப்பை ஜீவாவிடம் ஒப்படைத்து விடுவாராம்.

மேலும், ஜீவா இதை ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம் தான்.  இதன் பிறகு ஜீவா பெரிய ஆளாகி அதன் பிறகு மூர்த்தியை புரிந்துகொண்டு குடும்பத்துடன் சேருவராம். அதுமட்டுமில்லாமல் வீடு வேறு கட்டும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கிளைமாக்ஸ் அந்த வீட்டுக்குள் குடிபோகும்போது தான் நடக்குமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here