மதுரை மக்களே ஹாப்பி நியூஸ்.., மெட்ரோ பணி துவக்கம்?? வெளியான முக்கிய தகவல்!!!

0
மதுரை மக்களே ஹாப்பி நியூஸ்.., மெட்ரோ பணி துவக்கம்?? வெளியான முக்கிய தகவல்!!!
மதுரை மக்களே ஹாப்பி நியூஸ்.., மெட்ரோ பணி துவக்கம்?? வெளியான முக்கிய தகவல்!!!

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ சேவையால் ஏராளமான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவு படுத்த உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது. இதன் அடிப்படையில் மதுரையில் இருந்து 31 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை to திருமங்கலம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.


இதில் கோரிப்பாளையம், வசந்த் நகர் பகுதிகளில் சுரங்க பாதை அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய இ-டெண்டர் விடப்பட உள்ளதாக கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2023-24 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இதனால் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி மும்முரம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்னும் சில மாதங்களில் மெட்ரோ பணி தொடங்கும் என செய்திகள் வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here