சித்ராவின் 2.0 வெர்சன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் போட்டோஷூட்டால் கண்கலங்கிய ரசிகர்கள்!!

0
அரசியல் தொடர்பால் கொஞ்ச நாள்லயே கோடியில் புரண்ட விஜே சித்ரா?? வெளியான பகீர் தகவல்!!
அரசியல் தொடர்பால் கொஞ்ச நாள்லயே கோடியில் புரண்ட விஜே சித்ரா?? வெளியான பகீர் தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சித்ராவின் 2.0 வெர்சனாக மாறி இருக்கிறார் காவியா. அவரை போலவே போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நம் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர் தான் சித்ரா. ஆரம்ப காலத்தில் இருந்தே பல பிரச்சனைகளை கடந்து இந்த அளவிற்கு முன்னேறி இருந்தார். இவரின் புகழ் பட்டிதொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்தது. விஜய், அஜித் அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லாக்டவுன் சமயத்தில் ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயமானது இவருக்கு. அதில் ஆரம்பித்தது சித்ராவின் பிரச்சனை. நடிக்க கூடாது, அதை செய்ய கூடாது, இதை செய்ய கூடாது என தொடர்ந்து சித்ராவை கொடுமை படுத்தியுள்ளார். இந்த பேச்சுக்களை எல்லாம் தாங்க முடியாத சித்ரா சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொண்டார்.

இது பலரையும் வேதனையாக்கியது. தனது எதார்த்தமான நடிப்பால் மக்களை கட்டி போட்டிருந்த சித்ராவின் இழப்பை அவரது ரசிகர்களால் தாங்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சித்ராவின் தற்கொலை வழக்கில் தற்போது வரை கோர்ட்டில் கேஸ் போயிக்கொண்டுள்ளது.

மராட்டியத்தில் ஆக்சிஜன் கசிவு – 22 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!!

சித்ராவிற்கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவிற்கு பதிலாக காவியா நடிக்க வந்தார். தற்போது அவரும் மக்கள் மத்தியில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து தனது இணைய பக்கத்திலும் பல போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

அதில் தற்போது சித்ரா எப்பொழுதும் போடும் ட்ரெடிஷன் காஸ்டியும் போட்டு போட்டோஷூட் செய்துள்ளார். அச்சு அசலாக சித்ராவை மீண்டும் காண்பது போல இருந்தது அந்த புகைப்படம். சித்ரா கொடுக்கும் அதே போஸ். இதனை பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சி தான் ஆகியுள்ளனர். மேலும் சித்ராவை நியாபக படுத்தும் விதமாக இருப்பதால் பலரும் கண்கலங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here