மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு – முன்ஜாமீன் மனு தள்ளுபடி!!

0

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது அவரது நண்பரும் சக நடிகருமான மன்சூர் அலிகான் சற்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்சூர் அலிகான்:

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்று அளிக்கப்படும் நடிகர் விவேக் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு என்றே சொல்லலாம். இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திய மறுநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது விவேக்கின் நண்பரும் மற்றும் சக நடிகருமான மன்சூர் அலிகான் தடுப்பூசி செலுத்துவது குறித்து சற்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அவரது பேச்சு குறித்து கோடம்பாக்க மண்டல மருத்துவ அலுவலர் புபேஷ் புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கூறி மனு வழங்கியிருந்தார். அந்த மனுவில் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தானே கூறினேன் என்றும் தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது.

மராட்டியத்தில் ஆக்சிஜன் கசிவு – 22 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!!

அதில் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவித்தார் குற்றவியல் வழக்கறிஞர் ஜெய்சங்கர். முடிவில் நீதிமன்றம் கூறியதாவது, மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. இதன் காரணமாக மன்சூர் அலிகானை புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here