‘குக் வித் கோமாளி’ கனியின் “தயிர் சாத ஃபிரிட்டர்ஸ்” ரெசிபி – எப்படி செய்றதுன்னு பார்ப்போம்!!

0

உடலுக்கு எந்த வித பாதிப்பினையும் யாருக்கும் ஏற்படுத்ததாக ஒரே உணவு, தயிர் சாதம். அதே போல் பலருக்கும் பிடித்த உணவும் கூட. இப்படியாக இருக்க, “குக் வித் கோமாளி” புகழ் கனி செய்த “தயிர் சாத ஃபிரிட்டர்ஸ்” ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • தயிர் – 1 கப்
  • சாதம் – 1 கப்
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பில்லை – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
  • கடுகு உளுந்து – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • மாதுளை பழம் – 2 கையளவு (விருப்பப்பட்டால்)
  • அப்பளம் – 5
  • மைதா மாவு – 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • ஊறுகாய் – தேவையான அளவு

செய்முறை

முதலில், சாதத்தினை நன்றாக மிக்சியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். பின், தயிர் சேர்ந்து நன்றாக கிளறி விட்டு கொள்ளவும். பின், ஒரு காடையை காய வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அதில், கடலை பருப்பு, கடுகு மற்றும் உளுந்து சேர்க்க வேண்டும். இவை பொன்னிறமாக வந்ததும், அதில் பச்சை மிளகாய், சீரகம், கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு – முன்ஜாமீன் மனு தள்ளுபடி!!

பின், இதனை எடுத்து தயிர் சாதத்தில் போட்டு கிளறி விட்டு கொள்ளவும். விருப்பம் இருந்தால் இதில் மாதுளை பழத்தினை சேர்த்து கொள்ளலாம். பின், ஒரு பாத்திரத்தில் மைதா மாவினை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். சிறிதளவு மிளகு சேர்த்து நன்றாக கிண்டி வைத்து கொள்ளவும். பின், இரு வேறு தட்டுகளில் பிரட் துகள்கள் மற்றும் அப்பளத்தினை நொறுக்கி வைத்து கொள்ளவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தயிர் சாதத்தினை பிடிக்கும் போது அதில் சிறிதளவு ஊறுகாய் வைத்து கொள்ள வேண்டும். பின், எடுத்து வைத்துள்ள தயிர் சாதத்தினை உருண்டைகளாக பிடித்து, பிரட் துகள்களுடன் பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின், மீண்டும் ஒரு முறை மைதா மாவு கலவையில் போட்டு பிரட்டி விட்டு பிரட் துகள்களுடன் பிரட்டி கொள்ளவும். பின், இதனை நன்றாக பொரித்து கொள்ள வேண்டும். பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். அவ்ளோ தான்!!

டேஸ்டியான “தயிர் சாத ஃபிரிட்டர்ஸ்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here