மராட்டியத்தில் ஆக்சிஜன் கசிவு – 22 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!!

0

நாட்டில் சில பகுதிகளில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் ஆக்சிஜென் கசிவு ஏற்பட்டு 22 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

ஆக்சிஜென் கசிவு:

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் நாட்டில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் முழு நேர மற்றும் பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆக்சிஜென் பற்றாக்குறையை தடுப்பதற்கு அனைத்து மாநிலங்களும் மிக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று மராட்டிய மாநிலத்தில் நாசிக் நகரில் உள்ள ஜாகீர் உசைன் மருத்துவமனையில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும் பொழுது கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 30 நிமிடம் வரை ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

#SRHvsPBKS ஐபிஎல் போட்டி – பவுலிங்கில் அசத்தும் ஐதராபாத்!பஞ்சாபுக்கு 6 விக்கெட் காலி!!

அந்த மருத்துவமனையில் 300க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது 22 பேர் உயிரிழந்ததை குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here