14 வருடங்களுக்கு பிறகு#SAvsPAK டெஸ்ட் தொடர் – முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களை இழந்து தவிக்கும் தென் ஆப்பிரிக்கா!!

0

தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி சுமார் 14 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானிற்கு சென்று டெஸ்ட் தொடரை பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா:

தற்போது தென்னாபிரிக்கா அணி பாகிஸ்தானிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளது. அங்கு சென்ற தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளை பங்கேற்கச்சென்றுள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா அணி சுமார் 14 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு டெஸ்ட் தொடரை விளையாட சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி தவறவிட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு மீதமுள்ள ஆட்டத்தின் முடிவுகள் பொறுத்தே தெரியும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உருமாறிய கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி – மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!!

இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சை எதிர்கொள்ள தென் ஆப்பிரிக்கா அணியினர் திணறி வருகின்றனர். தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக எல்கர் 58 ரன்களை அடித்துள்ளார். அடுத்து வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வெளியேறியுள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக அலி 2 விக்கெட்களை எடுத்துள்ளார். தற்போது களத்தில் பவுமா மற்றும் லிண்டே விளையாடி வருகிறார்கள்.

லைவ் ஸ்கோர்:

தென் ஆப்பிரிக்கா – 165\5

பவுமா – 13*
லிண்டே – 18*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here