பெண்கள் குறைவான ஆடைகளை அணிந்தால், அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – பாகிஸ்தான் பிரதமர் கருத்தால் சர்ச்சை!!!

0

ஒரு பெண் மிகக் குறைவான ஆடைகளை அணிந்தால், அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருப்பது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பாகிஸ்தானில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பெண் ரோபோவாக இல்லாத பட்சத்தில் மிகக் குறைவான ஆடைகளை அணிந்திருந்தால், அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இது இயல்பான ஒன்று. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பத்திரிகை நேர்காணலில் இம்ரான் கானின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன, எதிர்க்கட்சித் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் இவரது தவறான கருத்தியலுக்கு எதிராக கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் 2020 ஆம் ஆண்டு நவம்பரில் ஒவ்வொரு நாளும் 11 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் 22,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இந்த குற்றங்களின் தண்டனை விகிதம் 0.03 சதவீதம் மட்டுமே. அதாவது 77 பேர் மட்டுமே இதுவரை தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here