அவரவர்களுக்கு அவரவர்கள் கவலை – இட ஒதுக்கீடு சர்ச்சை குறித்து பா.சிதம்பரம் ட்வீட்!!

0

வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்மைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். இது பல சர்ச்சைகளை கிளப்பியது. தற்போது இதுகுறித்து பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீடு:

தமிழக முதல்வர் பல நாள் கோரிக்கையான வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 10.5% ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பை அறிவித்து பல தரப்பினரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் துணை முதல்வரான பன்னீர்செல்வம் வன்னியர்களின் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று அறிவித்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதுகுறித்து பாமகவின் ராமதாஸ் இட ஒதுக்கீடு தாற்காலிகள் அல்ல நிரந்தரம் தான். மேலும் இதுகுறித்து தமிழக முதல்வர் என்னிடம் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார். ஆனால் துணை முதல்வரின் கருத்திற்கு இதுவரை தமிழக முதல்வர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பா.சிதம்பரம் இதுகுறித்து ஓர் கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து விமர்சனமும் அவர் செய்துள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் – வேளாண் சட்டங்கள் குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்!!

இதுகுறித்து சிதம்பரம் கூறியதாவது, வன்னியரின் இட ஒதுக்கீடு நிரந்தரம் இல்லை என்று பன்னீர்செல்வம் கூறுகிறார். அவருக்கு தென் மாவட்டங்கள் கவலை. வன்னியர் இட ஒதுக்கீடு நிரந்தரம் என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருக்கு அவருடைய கவலை. இதுகுறித்து தமிழக முதல்வர் என்ன சொல்லப்போகிறார்? மேலும் பாஜக அரசு தான் என்ன சொல்லப்போகிறது என்று விமர்சித்துள்ளார் சிதம்பரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here