Thursday, May 13, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் – தபால் வாக்கு முறைகேடால் உதவியாளர் அதிரடி கைது!!

Must Read

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது தபால் வாக்குகள் பெரும் பணிகள் மிக தீவிரமாகி நடந்து வருகிறது. இந்நிலையில் தபால் வாக்கை உதவியாளர் ஒருவர் மாற்றி போட்டுள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பணிகள் மிக சிறப்பாக நடந்து வருகிறது. தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தபால் வாக்குகளை பெரும் பணிகள் தற்போது தமிழகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தபால் வாக்குகள் அனைத்தும் மிக பாதுகாப்பாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. ஆனால் இதற்கு பின்பு தான் தபால் வாக்குகளில் அதிக முறைகேடு நடந்து வருகிறது. முதலில் தென்காசி பகுதிகளில் தபால் வாக்குகளை போட்டோ பிடித்து நண்பருக்கு பகிர்ந்த சம்பவம் அரங்கேறியது. தற்போது என்னவென்றால் தேர்தல் பணிகளை ஒழுங்காக கவனிக்கும் உதவியாளர் ஓர் சர்ச்சைக்குரிய விஷயத்தை செய்துள்ளார்.

பொய்களை கேட்க விரும்பினால் டிவியில் மோடி பேச்சை கேளுங்க’ – ராகுல் விமர்சனம்!!

அதன்படி திருவண்ணாமலையில் உள்ள செங்கம் தொகுதிக்குட்பட்ட பெரியகோளாப்பாடி கிராமத்தில் தபால் வாக்கை அளிப்பதற்கு மனநலம் குன்றிய இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்றிருந்தார். அங்கு உள்ள உதவியாளர் சரவணன் இந்த இளைஞரின் வாக்கை குறிப்பிட்ட கட்சிக்கு மாற்றிப்போட்டுள்ளார். இது சர்ச்சையை கிளப்பியது. தற்போது இதன் அடிப்படையில் உதவியாளர் சரவணன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஊழியர்களுக்கு மே 17 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த ஸ்பைஸ்ஜெட் திட்டம் !!!

ஊழியர்களுக்கு மே 17 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த ஸ்பைஸ்ஜெட் திட்டம் !!! மே 17 முதல் அனைத்து ஊழியர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -