தமிழகத்தில் தேர்தலுக்கு பின்பு பொதுமுடக்கம்?? ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகேவ கொரோனா பாதிப்பு எர்முகத்தில் இருந்து வருகிறது. தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் பேட்டியளித்துள்ளார்.

தமிழகம்:

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரம் போன்ற பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அதில் அனைத்து கட்சிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியதில்லை. இதன் காரணமாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனாவிற்கு பின்பு மீண்டும் முழு ஊரடங்கு போடப்படும் என்று தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது. தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

அவரவர்களுக்கு அவரவர்கள் கவலை – இட ஒதுக்கீடு சர்ச்சை குறித்து பா.சிதம்பரம் ட்வீட்!!

தேர்தலுக்கு பின்பு ஊரடங்கு ஏற்படுமா?? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். கடந்த ஆண்டு தடுப்பூசி நம்மிடம் இல்லை. ஆனால் இந்த முறை நம்மிடம் தடுப்பூசி உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். மேலும் நாளை முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் தேர்தலுக்கு பின்பு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here