Saturday, May 15, 2021

டெல்லி விவசாயிகள் போராட்டம் – வேளாண் சட்டங்கள் குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்!!

Must Read

டெல்லியில் சுமார் 100க்கும் அதிகமான நாட்களாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆராய்ந்த 3 பேர் கொண்ட குழு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

வேளாண் சட்டம்:

மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் புதிய வேளாண் சட்டங்களை அறிவித்தது. இதனை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் முதல் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 4 மாத காலமாகியும் இந்த போராட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை. இதுகுறித்து மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

என்ன ஆனாலும் சரி என்று விவசாயிகள் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இந்தியாவையே உலுக்கியது. மேலும் இந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதும் உள்ளவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இருந்தாலும் கூட இந்த போராட்டத்திற்கு முடிவு இன்னும் கிடைக்காதது வருத்தத்திற்குரியதே. இதுகுறித்து ஆராய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

பொள்ளாச்சி சம்பவம் மோடிக்கு தெரியாதா?? வறுத்தெடுக்கும் ஸ்டாலின், கனிமொழி!!

அந்த 3 பேர் கொண்ட குழுவும் விவசாய சங்ககளிடம் கலந்துரையாடி ஓர் அறிக்கை பத்திரிகையை உருவாக்கினர். தற்போது இவர்கள் தயார் செய்த அறிக்கையை சீலிட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கை விவசாய சங்கங்கள் போன்ற அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டவையாகும். விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வர வேண்டுமே என்று இந்திய மக்கள் அனைவரும் விரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -