
மத்திய, மாநில அரசு அறிவிக்கும் பல்வேறு நலத் திட்டங்களின் மூலம் பொதுமக்கள் பயனடைய ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் இந்த ஆதார் கார்டை அவ்வப்போது அப்டேட் செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை உடனடியாக புதுபித்து அப்டேட் செய்ய மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது வரும் 14ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவசமாக ஆதாரில் உள்ள பிழையை திருத்தம் செய்ய முடியும். எனவே பொதுமக்கள் அதற்குள் தங்களது ஆதார் கார்டை அப்டேட் செய்யும் படி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வாய்ப்பையும் தவற விட்டால் அதன் பிறகு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்திய ஆதாரை அப்டேட் செய்ய முடியும் எனவும் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்க டெண்டர்., பொதுமக்கள் வரவேற்பு!!!