
எதிர்நீச்சல் சீரியல் இப்போது தான் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பட்டம்மாள் பாட்டி குணசேகரனிடம் இனி நான் சொல்றது தான் இந்த வீட்டில் நடக்கும். எந்த தறுதலை பேச்சும் இனி இங்கு செல்லாது என்று சொல்ல கதிர் பாட்டியின் கழுத்தை நெறிக்கிறார். உடனே போலீசார் கதிரை மிரட்ட அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதன் பிறகு தான் கதையே ஆரம்பமாகும் என தெரிகிறது. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த ப்ரோமோவில் குணசேகரன் பாட்டியிடம் அமைதியாக பேசுகிறார். இதற்கு பட்டம்மாள் இனி உன்னோட நடிப்பு எதுவுமே இங்கு செல்லாது என அசிங்கப்படுத்தி விடுகிறார். பின் குணசேகரன் ஆடிட்டர், வக்கீலை அழைத்து என்ன செய்யலாம் என்று பேச அவர்களும் கையை விரிக்கின்றனர். இதனால் வேறு வழி இன்றி குணசேகரன் பேசாமல் கிழவியை போட்டு தள்ளி விடலாம் என்கிறார். இதை கேட்ட கதிர் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.