தக்காளி இல்லாமல் சப்பாத்திக்கு தொட்டுக்க இந்த தொக்கை சமைத்து பாருங்க., சுவை வேற லெவல்!!

0
தக்காளி இல்லாமல் சப்பாத்திக்கு தொட்டுக்க இந்த தொக்கை சமைத்து பாருங்க., சுவை வேற லெவல்!!
தக்காளி இல்லாமல் சப்பாத்திக்கு தொட்டுக்க இந்த தொக்கை சமைத்து பாருங்க., சுவை வேற லெவல்!!

தற்போது எப்போதும் இல்லாத வகையில் தக்காளி விலை உச்சம் கண்டு இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் சமையல் பயன்பாட்டிற்கு தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இதனால் தக்காளி பயன்படுத்தாமல் சுவையான வெங்காயத் தொக்கு ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள்;

  • சின்ன வெங்காயம் – 1/2 கிலோ
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • கடுகு, உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

  • நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • புளி கரைசல் – 1 கப்
  • பொடி செய்த வெல்லம் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்

இந்த வெங்காய தொக்கு ரெசிபி தயாரிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

30 நாள் தொடர்ந்து அசைவம் சாப்பிடாம இருந்தா இந்த மேஜிக் நடக்கும்.., வெளியான பகீர் தகவல்!!

பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விடவும். பின் அதில் புளி கரைசலை ஊற்றி ஒரு 10 நிமிடம் கடாயை மூடி போட்டு மூடவும். கடைசியில் அதில் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி விட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு சுவையான வெங்காய தொக்கு ரெடி. இதை சுட சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here