ஒரு வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகளா?? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

0
onion
onion

நாம் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களின் நன்மைகளை பற்றி ஒரு போதும் அறிவதில்லை. எளிதாக கிடைப்பதால் என்னவோ அதன் அருமையும் நமக்கு தெரிவதில்லை. நம் வீடுகளில் இருக்கும் முக்கியமான பொருட்களில் வெங்காயமும் ஒன்று. இதனை நாம் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். ஆனால் இதனை பற்றிய முழு நன்மைகளை நாம் அறிந்திருக்க மாட்டோம்.

வெங்காயம்

உணவுகளில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்றவை காட்டமான சுவையுடன் இருக்கும். இஞ்சியை சாறு எடுத்து வாரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. அதனை விட வெங்காயத்திலும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் இதன் நன்மைகள் பற்றிய விவரங்களை நாம் அறிந்திருக்க மாட்டோம். இது தோல் வியாதிகளை கூட குணமாக்குகிறது.

onion
onion
  • வெங்காயத்தில் ரிபோபிளவின் என்னும் வைட்டமின் அதிகம் உள்ளதால் இதனை பச்சையாக கடித்து சாப்பிட்டால் கண் வலி மற்றும் வாய்ப்புண் குணமடையும்.
  • சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் வெங்காத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.
  • தலைவலி வந்தால் இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்தால் தலைவலி குணமடையும். மேலும் தலையில் நீர் கோர்த்திருந்தாலும் குணமடையும்.
onion
onion
  • உடலில் ரத்தம் ஊற வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வர வேண்டும்.
  • வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் பாட்டு பாடும் அளவிற்கு குரல் வளம் அதிகரிக்கும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

  • ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைய தினமும் 100 கிராம் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உடலில் அலர்ஜி ஏற்பட்டால் அந்த இடத்தில் வெங்காயத்தை அரைத்து தேய்த்து வந்தால் தேமல் குணமடையும்.
onion
onion
  • மேலும் ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை பிரச்சனை குணமாகும்.
  • மேலும் வெங்காயம் பல் வலிக்கு சிறந்த மருந்து. பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கும்.
  • பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் கூட குணமாகுமாம். இந்த வெங்காயத்தை அரைத்து சர்க்கரை சேர்த்து கலந்து வடிகட்டி அந்த சாற்றினை 15 நாட்கள் குடித்து வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here