அமெரிக்க அதிபர் டிரம்ப் & மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி!!

0

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் தற்போதைய அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளரும் ஆன டொனால்ட் டிரம்ப்பிற்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறுதியாக வெள்ளை மாளிகைக்குள்ளும் கொரோனா நுழைந்து விட்டதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

கொரோனா தொற்று:

உலகளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக அதிபர் டிரம்ப் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அங்கு இதுவரை 77 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 10 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கிடையில் இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உளள்து. இதில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் டிரம்ப் ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிபர் மற்றும் அவரது மனைவி இருவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா என இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருவரும் பல பிரச்சார கூட்டங்கள் மற்றும் விவாதங்களில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்னும் பிரச்சார பணிகள் முடிவடையாத நிலையில் டிரம்ப் அதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

விஜயகாந்த் & பிரேமலதா இன்று வீடு திரும்புகிறார்கள் – மருத்துவமனை அறிக்கை!!

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here