கொரோனா தடுப்பூசி எதிரொலி – ஒடிசாவில் வாலிபர் மரணம்!!

0

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட ஒருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பூசி:

தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. மேலும் உலக நாடுகள் அவசர கால பயன்பாட்டிற்காக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த வரிசையில் இந்தியாவில் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளனர். எனவே முதற்கட்டமாக மருத்துவ செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதில் தடுப்பூசி வழங்குவதில் ஒடிசா மாநிலம் 2 வது இடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலத்திற்கு மொத்தம் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இதில் நேற்று மாலை நிலவரப்படி 20.39 லட்ச முன்கள பணியாளர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள தடுப்பூசிகளை வரும் 10ம் தேதிக்குள் வழங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஒடிசா மாநிலத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கடும் வீழ்ச்சியை கண்ட பங்குச்சந்தை – 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

அது என்னவென்றால் கடந்த 23ம் தேதி அன்று 27 வயது நபர் ஒருவர் கொரோனா தடுப்பூசியை போட்டுள்ளார். தற்போது அவர் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவர் சம்பால்பூரில் உள்ள வீர சுரேந்திர சாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தடுப்பூசியால் தான் மரண மடைந்தாரா?? என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 2 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here