தோழிகளுடன் கும்மாளம் அடிக்கும் பிக் பாஸ் வனிதா – வைரலாகும் புகைப்படம்!!

0

சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலமாக பேசப்படுவது என்றால் அது வனிதா விஜய்குமார் பற்றி தான். பல பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்த வனிதா தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வனிதா

நடிகர் விஜகுமாரின் மகளாகிய வனிதா தொடர்ந்து சில வருடங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வனிதாவை சர்ச்சை ராணி என்றே கூறலாம். தனது கல்யாணத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து தற்போது வரை பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

முதலில் அவரது மகன் ஸ்ரீஹரிக்காக நடந்த சண்டையில் இருந்து தற்போது பீட்டர் பால் பிரச்சனை வரை சொல்லிக்கொண்டே போகலாம். ஆரம்பத்தில் விஜய் குமாரின் மகள் என்ற அடையாளம் போய் தற்போது வனிதாவின் அப்பா விஜய் குமார் என்று சொல்லும் அளவிற்கு மாறியுள்ளார் வனிதா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி தனது காரசாரமான பேச்சுகளால் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் அவருக்கு பிக் பாஸ் மறுவாய்ப்பு அளித்தது. ரீஎன்ட்ரியில் வனிதாவின் மற்றொரு முகத்தையும் நம்மால் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளியின் கலந்துகொண்டு டைட்டிலை கைப்பற்றி மக்கள் மனதையும் கொள்ளைகொண்டார். அதன் பிறகு தான் இவருக்கு பெரிய பிரச்சனையே ஆரம்பித்தது. பீட்டர் பால் என்பவரை லாக்டவுன் சமயத்தில் திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

அரைகுறை ஆடையில் பூனைகளுடன் துள்ளி விளையாடும் அமலா பால் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

போலீஸ் வரை இந்த பிரச்சனை சென்றது. எங்கு சென்றாலும் வனிதாவின் பேச்சே தலைதூக்கியது. இந்த பிரச்சனை அடங்கும் நேரத்தில் அவர் பீட்டர் பாலையும் பிரிந்து தற்போது தனது மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

முன்பை விட ஆக்ட்டிவாக இருக்கும் வனிதா தனது வலைப்பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தனது தோழிகளுடன் கும்மாளம் அடிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here