மனித உரிமை விவகாரங்களில் சீனாவை விமர்சிக்க அமெரிக்காவிற்கு தகுதி இல்லை – வடகொரியா..!

0
மனித உரிமை விவகாரங்களில் சீனாவை விமர்சிக்க அமெரிக்காவிற்கு தகுதி இல்லை - வடகொரியா
மனித உரிமை விவகாரங்களில் சீனாவை விமர்சிக்க அமெரிக்காவிற்கு தகுதி இல்லை - வடகொரியா

அமெரிக்காவில் கடந்த வாரம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கொலை சம்பவம் அமெரிக்காவில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து ஹாங் காங் விவகாரங்களில் டிரம்ப் தலையிட்டு வருகிறார்.

அமெரிக்கர்கள்

ஹாங் காங் விவகாரங்களில் சீனா தலையிடுவதாகவும், சீனாவுக்கு எதிராக போராடும் ஹாங் காங் மக்கள் வீரர்கள், ஹீரோக்கள் எனவும் அமெரிக்கா பாராட்டி வருகிறது. உள்நாட்டிலேயே இனவாத, இனவெறி பிரச்சினைகளை வைத்திருக்கும் அமெரிக்கா, சீனாவை குறைசொல்வதாக ஏற்கெனவே சீன தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில், ஹாங் காங் விவகாரத்திலும், மனித உரிமை விவகாரங்களிலும் சீனாவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு தகுதியில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்க அரசு செயலாளரான மைக் பாம்போ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சீன கம்யூனிஸ் கட்சியின் போக்கு மேற்கத்திய சிந்தனைகளையும், மேற்கத்திய ஜனநாயக நாடுகளையும், மேற்கத்திய மதிப்பையும் அழிக்கும் வகையில் இருக்கிறது. இது அமெரிக்கர்களுக்கு ஆபத்து” என தெரிவித்திருந்தார்.

வடகொரியா

இதுகுறித்து வடகொரிய அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் ஆளும் கட்சியான கொரிய தொழிலாளர் கட்சியின் வெளியுறவுத் துறை பிரதிநிதி எழுதியுள்ள கட்டுரையில், “சீன கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பும் வகையில் ஹாங் காங், தைவான், மனித உரிமைகள், வர்த்தக விவகாரங்கள் குறித்து மைக் பாம்போ தெரிவித்துள்ள கருத்துகள் முட்டாள்தனமானவை.

வெங்காயம், பயிறு வகைகள் அத்தியாவசிய பொருளில் இருந்து நீக்கம் – மத்திய அரசு உத்தரவு..!

உளவு பார்த்தல், மற்ற நாடுகளுக்கு எதிராக திட்டம் தீட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள மைக் பாம்போவும் அறியாமையில் சிக்கியுள்ளார்.

அமெரிக்க தலைவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறுவது அமெரிக்கா வீழ்ச்சியடைவதையே குறிக்கிறது. தீவிர இனவெறியாளர்களால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்கே படையெடுத்துவிட்டனர். இதுதான் அமெரிக்காவின் இன்றைய நிலவரம்.

தமிழகம் முழுவதும் டாக்டர்கள் & செவிலியர்கள் போராட்டம் – 7 அம்ச கோரிக்கைகள்..!

அமெரிக்காவின் தாராளவாதமும், ஜனநாயகமும் போராட்டக்காரர்கள் மீது இடதுசாரி முத்திரை குத்தி அவர்களை ஒடுக்க நாய்களை கட்டவிழ்க்கும் அளவுக்கு அச்சுறுத்துகின்றனர்” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here