தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் 10 ஆண்டுகள் இந்தியா வர தடை – மத்திய அரசு அதிரடி..!

0
தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 10 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவுக்குள் கொரோனா பாதிப்பு தீவிரமெடுக்க டெல்லியில் நடைபெற்ற தப்லீக் சமய மாநாடு முக்கிய காரணமாக உள்ளது. இதில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மதபோதகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உரிய அனுமதியின்றி தலைநகர் டெல்லியில் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கோர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஒரே வாரத்தில் 250 கோடிக்கு மது விற்பனை – கேரளாவில் புதிய உச்சம்

இதில் பங்கேற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மூலமாக பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இது பின்னர் கண்டறியப்பட்டு அதில் கலந்து கொண்டவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டது. அதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்ப்பட்ட காரணத்தால் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் அனுமதியின்றி மாநாடு நடத்தியதற்காக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 960 பேர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது. சுற்றுலா விசாவில் வந்து விதிமீறிய செயல்களில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here