முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!

0
முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. உலக பணக்கார நாடுகளே இதனால் ஸ்தம்பித்து போய் உள்ளன. இதற்கான அணைத்து மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் காப்பீடு திட்டம்

முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படத்துள்ளது. அதில் இந்த காப்பீடு திட்டத்தில் அரசு தனியார் நிறுவனத்திற்கு அளிக்க கூடிய கட்டண தொகுப்பை பற்றி மக்கள் நல்வாழ்வு துறை செயலாளரால் குழு அமைக்கப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அதில் அரசு வழங்க வேண்டிய கட்டணங்களை குறித்தும் நிபந்தனைகளையும் வெளியிட்டது. அதன்படி குறைவான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மற்றும் அறிகுறிகள் இல்லாத நபருக்கு ரூ. 5000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரேடு ஏ1 , ஏ 2 க்கு 10000 முதல் 15000 வரை மேலும் கிரேடு ஏ 3, ஏ 4 க்கு 9000 முதல் 13500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனையும் தனியார் மருத்துவமனையும் இணைந்து செயல்படுகிறது. மேலும் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு சில நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. அவைகளாவன,

தலைநகர் ‘சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா’ – முழு விபரம்..!

அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட படுக்கை வசதிகளில் 25 சதவீதம் முதல்வர் காப்பீடு திட்டத்திற்கு கீழ் வரும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த காப்பீடு திட்டத்திற்கு கீழ் வரும் எந்த நோயாளிகளும் மருத்துவமனைக்கு எந்த கட்டணமும் வழங்க தேவையில்லை.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் தனியார் மருத்துவமனைகள் பணம் செலுத்த கூறினால் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும் விபரங்கள் மற்றும் புகாருக்கு 1800-425-3993 என்ற கட்டணமில்லா தொலைபேசியை அணுகவும். இவ்வருக்கு கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here