வெங்காயம், பயிறு வகைகள் அத்தியாவசிய பொருளில் இருந்து நீக்கம் – மத்திய அரசு உத்தரவு..!

0

வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் உள்ளிட்ட விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விவசாய பொருட்கள்

விளைபொருட்களை பதுக்கி வைப்பதற்கு தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானலும் விளைபொருட்களை இறுப்பு வைத்து உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய முடியும்.

வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து – சென்னை மாநகராட்சி ஆணையர்..!

விவசாயிகளின் வருவாய் உயரும். இதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

அதே நேரத்தில், கடுமையான விலை உயர்வு, தேசியப் பேரிடர், யுத்தம் போன்ற காலகட்டங்களில் நுகர்வோரைப் பாதுகாக்கவும் சட்டத்தில் போதிய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், விவசாய விளை பொருட்களை விவசாயிகள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு அவசரச் சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரே நாடு ஒரே வணிக முறை சாத்தியமாகும் என்றும் அது கூறியுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

விவசாயிகள் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் பெரிய சில்லரை விற்பனையாளர்கள், உணவு பதப்படுத்துவோர், ஏற்றுமதியாளர்களிடம் நேரடி வணிகம் செய்ய மற்றொரு அவசரச் சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here