வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து – சென்னை மாநகராட்சி ஆணையர்..!

0

கொரோனா தாக்கம் அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் கொரோனா:

தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அங்கு வழங்கப்படவில்லை. நேற்று மட்டும் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது அதன் தீவிரத்தன்மையை உணர்த்துகிறது. இந்நிலையில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். அதற்குப் பதிலாக கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்படுவர் எனவும் தொற்று பாதித்த நபரின் தொடர்பில் இருந்தவர்களும் இனி அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்து உள்ளார்.

எனவே இனி வீட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் மொத்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் பிரகாஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here