தமிழக தலைநகராக திருச்சி மாற்றப்படுகிறதா..? அமைச்சர் பதில்..!

0
அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

தமிழக தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் இருப்பதால் திருச்சிக்கு தலைநகர் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் மையமாக தலைநகர் சென்னை உள்ளது. அங்கு நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருவதால் சென்னைக்கு சென்று வேலை செய்யக் கூட பலரும் அஞ்சுகின்ற சூழல் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் தலைநகராக திருச்சி மாற்றப்படுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் அரிசி வழங்குவதை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தலைநகராக திருச்சி மாற்றப்படுமா என்கிற கேள்விக்கு, மக்களின் விருப்பத்தைப் பொறுத்து தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே தலைநகரை மாற்றம் செய்வது குறித்த சிந்தனைக்கு இது நேரம் இல்லை என பதிலளித்தார். மேலும் தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் பொறுப்பாக பணியாற்றுவதாகவும், புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச அரிசியில் 4 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 50 கிலோ அரிசி வழங்கப்படும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here