தமிழகம் முழுவதும் டாக்டர்கள் & செவிலியர்கள் போராட்டம் – 7 அம்ச கோரிக்கைகள்..!

0
மருத்துவர்
மருத்துவர்

தமிழகம் முழுவதும் நாளை 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.

டாக்டர்கள் போராட்டம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் புதிதாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள் பணியும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைப்பளுவும் அதிகரிக்கிறது. இதனால் இரவு, பகலாக அவர்கள் உழைத்து வருகின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பாலிவுட் இயக்குனர் பாசு சாட்டர்ஜி மரணம் – சோகத்தில் திரையுலகம்..!

அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டாலும், நாளை 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கருப்புப்பட்டை அணிந்து போராட்டம் நடத்தப் போவதாக அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு சங்கம் அறிவித்து உள்ளது. அதில் வலியுறுத்தப்பட உள்ள 7 அம்ச கோரிக்கைகள் இதோ,

  • கொரோனா பாதித்து இறந்த செவிலியர் பிரிசில்லா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • கொரோனா பாதித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்க வேண்டும்.
  • கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள் & செவிலியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்க வேண்டும்.

மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here