விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் என்ன சிக்கல்..? மத்திய அரசு விளக்கம்..!

0
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் என்ன சிக்கல்..? மத்திய அரசு விளக்கம்..!
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் என்ன சிக்கல்..? மத்திய அரசு விளக்கம்..!

தற்போது விஜய் மல்லையா இந்தியாவிற்கு கொண்டுவர போவதாக தகவல் அதிகமாக வெளியாயின. அதனை தொடர்ந்து மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது

விஜய் மல்லையா

சுமார் ரூ 9 ஆயிரம் கோடி வரை வாங்கி கடன் மோசடியில் தேடிக்கொண்டிருப்பவர் விஜய் மல்லையா இவர் லண்டனில் தப்பி சென்று அங்கு வசித்து வருகிறார். இவரை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த நிலையில் இன்று மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன இது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. அதி கூறியதாவது,”கடந்த மாதம் இந்தியா கொண்டுவரப்படுவதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

உலகப்போரில் கூட இப்படி ஒரு ஊரடங்கு இல்லை – ராகுல் காந்தி

இதை எதிர்த்து இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். இந்த விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் முழுவதுமாக தீர்க்கப்படவில்லை. அவை முடிக்கப்பட்டால் மட்டுமே மல்லையாவை இந்தியா கொண்டுவருவது சாத்தியமாகும்” இவ்வாறு கூறியுள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்தின் வெளியேற்ற சட்டத்தின்படி, ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என உயர் அல்லது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் அவர் 28 நாட்களுக்குள் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் புகலிடம் கேட்டு அகதி என்ற அடிப்படையில் விண்ணப்பித்திருந்தால், அந்த விண்ணப்பம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே அவர் நாட்டை விட்டு வெளியேற முடியும்.

இதுதொடர்பாக விஜய் மல்லையா தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் தூபே பதில் ஏதும் அளிப்பதற்கு மறுத்து விட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளை விஜய் மல்லையா தொடர்ந்து மறுத்து வருகிறார். வங்கிகளிடம் தான் பெற்ற கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here