முஸ்லீம் ஸ்டைலில் கமகம “மட்டன் பிரியாணி” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

அனைவர்க்கும் பிடித்த உணவு என்ன என்று கேட்டால் நிறைய பேர் பிரியாணி என்று தான் சொல்வார்கள். பிரியாணி என்றாலே நம் அனைவர்க்கும் நினைவில் வருவது முஸ்லீம் வீட்டு பிரியாணி தான். என்னதான் நாம் பிரியாணி சமைத்தாலும் முஸ்லீம் வீட்டு பிரியாணிக்கு ஈடாகாது. முஸ்லீம் ஸ்பெஷல் பிரியாணி எப்படி சமைக்கலாம்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா ரைஸ் -1kg

மட்டன் – 1kg

வெங்காயம் -1/2kg

தக்காளி -1/4kg

பச்சை மிளகாய் – 5

மல்லி -1கை அளவு

புதினா -1கை அளவு

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 10gm

தேங்காய் எண்ணெய் – 200ml

நெய் – 200ml

தயிர் – 250ml

மல்லிதூள் – 50gm

மிளகாய்த்தூள் – 50gm

எலுமிச்சை பழம் – 1

இஞ்சி, பூண்டு விழுது – 50gm

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

அடி கனமான ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும் . அதில் முதலில் தேங்காய் எண்ணையை ஊற்றிக்கொள்ளவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை பொடி செய்து எண்ணையில் போட்டு மல்லிதழை, புதினா தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து வதக்கவும். மட்டன் பாதி அளவு வேகும் வரை வதக்கி கொள்ளவும். பிறகு மல்லி தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கவும். இப்போது தயிரை ஊற்றி கிளறி விடவும். பிறகு அரிசியின் அளவிற்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

சூப்பரான சுவையில் “மிளகு வான்கோழி கறி வறுவல்” ரெசிபி – வாங்க அசத்தலாம்!!

தண்ணீர் கொதித்த பிறகு அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு ஊற்றி நெருப்பை குறைத்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து நெய்யை ஊற்றி கிளறி 20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். சுவையான முஸ்லீம் ஸ்டைல் மட்டன் பிரியாணி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here