சூப்பரான சுவையில் “மிளகு வான்கோழி கறி வறுவல்” ரெசிபி – வாங்க அசத்தலாம்!!

0

அசைவ பிரியர்களுக்காக ஒரு சூப்பரான ரெசிபி. இதுவரைக்கும் கோழி, மட்டன், முட்டை, மீன் சாப்பிட்டு இருப்போம். ஆனால், இன்னைக்கி நாம பார்க்க போறது சூப்பரான பெப்பர் வான்கோழி வறுவல் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க. வான்கோழி கறி ஆண்களுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

வான் கோழிக்கறி – கால் கிலோ
பெ. வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு – 2
பிரியாணி இலை – 2
சோம்பு – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – தாளிக்க

செய்முறை:

முதலில் கால் கிலோ வான்கோழி கறியை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கழுவி, அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். தக்காளி பொடிப்பொடியாக நறுக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பொண்ணிறமாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு சேர்த்து கிளற வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிய பின் ஊறவைத்த கறியை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மல்லித்தூள் சேர்த்து 5 நிமிடம் கிளற வேண்டும். பச்சை வாசனை போனவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும். 15நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி கறி நன்றாக வெந்தவுடன் மிளகு தூள், கருவேப்பிலை சேர்த்து பரிமாறினால் மிக சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here