சந்தன நிற உடையில் பார்பிடால் போல காட்சியளித்த அனிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இணையத்தையே கலக்கி வருபவர் சுரேந்தர். பல போட்டோஷூட்களை எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது பார்பிடால் போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அனிகா சுரேந்தர்

தமிழில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார் அனிகா. முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் அடுத்ததாகவும் விஸ்வாசம் படத்தில் அஜித் உடன் நடித்தார்.

இந்த படத்திற்கு அவரை பரிந்துரைத்ததே அஜித் தானாம். இப்பொழுது வரை அஜித்தின் ரீல் மகளாகவே கருதப்படுகிறார் அனிகா. குழந்தை நட்சத்திரமாகவே நம் மனதில் பதிந்த அனிகா தற்போது 16 வயது மங்கையாகவே நமக்கு காட்சியளிக்கிறார்.

anikha
anikha

இப்பொழுது கூட அவரின் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் வந்தனர். தமிழில் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் மிருதன் படத்திலும் நடித்திருந்த இவர் மிருதன் பார்ட் 2 விலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தமிழில் மட்டுமல்ல இவர் மலையாளத்திலும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். இவர் முதன்முதலில் நடித்ததும் மலையாளத்தில் தானே. இப்பொழுது நாயகியாகவும் உருவெடுத்துள்ளார் அனிகா. இந்த லாக்டவுன் சமயத்தில் இருந்தே பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனால் நாளடைவில் இவரது வயதுக்கு மீறிய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனால் பலரும் திட்டியும் வந்தனர். எதையுமே காதில் வாங்காமல் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி தான் வருகிறார் அனிகா. மேலும் சில தினங்களுக்கு முன்பு அவர் டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படங்கல் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சியடைய தான் செய்தது.

பலரும் பலவாறு அட்வைஸ் செய்தும் வந்தனர். இப்பொழுதும் அதே போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பார்பிடால் போலவே காட்சியளிக்கும் அனிகாவை பார்த்த பலரும் மெய்மறந்து போயுள்ளனர் என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here