Friday, April 26, 2024

முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு – தமிழக அரசியலில் பரபரப்பு!!

Must Read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு முறைகேடு வழக்கில் கைதான சசிகலா மற்றும் மேலும் இருவருக்கு சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறை நிர்வாகத்திடம் மனுதாக்கல் கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் சிறை அடைப்பு:

உச்சநீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவரையும் பெங்களூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் சொத்து முறைகேடு வழக்கில் கைதான அவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமாக தலா ரூ 10 கோடியே 10 ஆயிரம் மூவரும் கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அளித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த மாதம் சுதாகரன் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார். மற்ற இருவர்களின் அபராதம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இவர்கள் மூவரும் 4 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

சசிகலா கோரிக்கை:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு முறைகேட்டில் கைதான மூவருக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி உடன் சிறை தண்டனை முடிவடைக்கிறது என்று சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். ஜனவரி 27 ஆம் தேதியுடன் முடியும் நிலையில் சசிகலா தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார்.

6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!!

மேலும் அவர் சிறைத்துறையின் சட்டத்தின் விதிப்படி 126 நாட்கள் முன்பே சலுகையாக விடுதலை வழங்க முடியும் என்று சிறை நிர்வாகத்தில் கோரிக்கையையும் வைத்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -